வடக்கு – கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை சிதைக்கும் செயற்பாடுகளை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.
சீனத்தூதுவர் வடக்கிற்கு வருகை தரவுள்ள நிலையில் இவ்வாறு மாணவர்கள் கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள்.
குறித்த அறிக்கையில்,
வடக்கு – கிழக்கு கடற்பரப்பில் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை அரசாங்கம் பலவந்தமாக அத்துமீறி மேற்கொண்டு வருவதனால் தாம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாகவும், தமது வாழ்வாதாரத்தை சீர்செய்வதற்கு பதிலாக பொருளாதார ரீதியில் சாத்தியமில்லாத நிலையில் பாரம்பரிய வாழ்வாதார பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வடமாகாண ஆழ்கடல் கடற்றொழிலாளர்கள் இந்தப் பண்ணைகளால் மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்றும், கடல் அட்டை ஏற்றுமதிக்கு மட்டுமே என்றும், அது தங்களுடைய முதன்மையான கடற்றொழிலுக்கு இல்லை என்றும் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளனார்.
கொழும்பில் அல்லது மூன்றாம் நாட்டில் வசிக்கும் வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான பண்ணைகள் தாங்கள் வெறும் தொழிலாளர்கள் என்றும் கடற்றொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேபோன்ற நடவடிக்கை நாட்டிலுள்ள வேறு எங்கும் மேற்கொள்ளப்படாத நிலையில், வட மாகாணத்தில் மட்டும் கடல் அட்டைப் பண்ணைகள் ஊக்குவிக்கப்படுவது ஏன் என்றும் கடற்றொழிலாளர் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வடமாகாண கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கை ஏற்கனவே நலிவடைந்து வரும் நிலையில், அண்மைக்காலமாக சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் கடற்றொழில் அமைச்சின் நடவடிக்கை கடற்றொழில் சமூகத்தினரிடையே மேலும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடற்றொழிலாளர்களின் நலனைப் பணயம் வைத்து சீன நலன்களை ஊக்குவிக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் போவதாக கடற்றொழிலாளர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர், ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர், கடற்றொழிலாளர் சங்கத்தினர் ஆகியோர் சீனாவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைக்கு தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று எமது வளங்களை பிற நோக்கங்களுக்காக ஆக்கிரமிக்கும் சீன அரசாங்கத்தின் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும்.
இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் குறிப்பாக சீனர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சியாகக் கருதப்படும் உத்தேச மீன்பிடி சட்டமூலத்தையும் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டிக்கிறனர்.
இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டுக் கப்பல்கள் குறிப்பாக சீனர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கும் அரசாங்கத்தின் முயற்சியாகக் கருதப்படும் உத்தேச மீன்பிடி சட்டமூலத்தையும் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டிக்கிறனர்.