தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மேலும் 8 கடற்றொழிலாளர்கள் நேற்று கோடியக்கரை கடலில், இலங்கையை சேர்ந்த கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
நேற்று அதிகாலை 4 மணியளவில் கண்ணாடி இழைப் படகில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அவர்களில் இருவர் மரக்கட்டைகளுடன் இந்திய கடற்றொழிலாளர்களின் படகில் ஏறி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களால் பிடிக்கப்பட்ட 60 கிலோ மீன்கள் மற்றும் படகில் இருந்த உபகரணங்களை எடுத்துக்கொண்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மற்றுமொரு சம்பவத்தில் குறித்த இலங்கையின் கடற்கொள்ளையர்கள், பிறிதொரு இந்திய படகின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் தமிழக கடற்றொழிலாளர்கள் மீதான தொடர் தாக்குதலில், கடந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 40 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
LINK – https://timesofindia.indiatimes.com/city/chennai/eight-more-nagappattinam-fishermen-attacked-by-suspected-sea-pirates-from-sri-lanka/articleshow/104970094.cms