விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது செயற்பட்டு வந்த அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று நியமிக்கப்பட்ட புதிய இடைக்காலக் குழு அதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.