வைத்தியசாலை வளாகத்தினுள் கறுப்புக் கொடி,பதாதைகள் காட்சிப்படுத்தப்படுவதற்கு தடை
விதித்து சுகாதாரஅமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உயிருக்கு போராடும் நிலையிலுள்ள நோயாளிகள் கறுப்புக்கொடியை பார்ப்பதால் மன உளைச் சலுக்கு ஆளாகும் நிலைஏற்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தனது சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளர்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார ஊழியர்களின் பணிக்கு இதனூடாக இடையூறு ஏற்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கமைய, சுகாதார அமைப்புகளின் வளாகத்தினுள் கறுப்புக் கொடிஏற்றுவதையும் பதாதைகளை காட்சிப்படுத்துவதையும் தவிர்க்குமாறு குறிப் பிட்டு சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சுற்றறிக்கை ஊடாக தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.எதிர்வரும் செவ்வாய்க்கிழமை
நடைபெறவுள்ள நிறைவேற்று சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை கள் குறித்து தீர்மானிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்
ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.