புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலமானது ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கண்டிக்கு சென்றிருந்த பிரதமர் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளி யிடுகையிலேயே இந்த தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலம் தொடர்பில் விமர் சனங்கள் எழுந்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் உறுப்
பினர்கள் ஆகியோருடன் கலந் துரையாடிய பின்னரே சட்டம் நிறைவேற்றப்படும்.
ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு பிறகு ஏப்ரல் 3ஆவது வாரத்தில்தான் பாராளுமன்றம் கூடும். இதன்
போது மேற்படி சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத் தில் உள்ளடக்கப்படும்-என்றார்.