தரமற்ற எரிபொருள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார்.இந்த தரக்குறைவான எரிபொருள் ஐ.ஓ.சி நிறுவனம் மற்றும் சினோபெக் ஆகிய எரிபொருள் நிலையங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-ஐ.ஓ.சி நிறுவனம் இம்மாதம் 5ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து 31ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை நாட்டுக்கு இறக்குமதி செய்தது. அதில் 20ஆயிரம் மெற்றிக் தொன் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டதுடன், 11ஆயிரம் மெற்றிக் தொன், கொலன்னாவையிலும்களஞ்சியப் படுத்தப்பட்டது.
அதேபோன்று 6500 மெற்றிக் தொன் பெற்றோலும் கொண்டு வரப்பட்டது.கொலன்னாவையில் களஞ்சியப்படுத்தப்பட்ட இந்த இரண்டையும் பரிசோதித்ததில் பெற்றோல் தரமானதாக இருந்தது. ஆனால், டீசல் தரமற்றதென நிரூபணம் ஆனது. இரண்டுமுறை பரிசோதித்தும் அது தரமற்ற டீசல் என்றே முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
அதனால் டீசல் பெறுவதை நாம் நிராகரித்தோம். ஆனால், சீன துறை முகத்துக்கு சென்ற 20ஆயிரம் மெற் றிக் தொன் டீசலுக்கு என்ன நடந்தது. அவை தொடர்பில் பரிசோதனைகள் எங்கு இடம்பெறுகின்றன
எனத் தெரியவில்லை.
நாடு முழுவதும் தரமற்ற எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றன. அரச பலத்துடன்தான் தரமற்ற
எரிபொரள் நாட்டுக்குள் இவ்வாறு கொண்டுவரப்படுகிறது-என்றார்.