இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் , உலக பண்க்காரகளில் ஒருவரான் எலான் மஸ்க் மன்னிப்பு கோரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கலிபோர்னியா மாகாணத்தில் பிரெமன்ட் நகரில் உள்ள டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலைக்கு தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் சென்று பார்வையிட்டார்.
இதுதொடர்பாக பியூஷ் கோயல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
முக்கிய பதவிகளில் இந்தியர்கள் பதவி வகிப்பது மற்றும் டெஸ்லாவின் விநியோக சங்கிலியில் வளர்ந்து வரும் இந்திய தானியங்கி பொருட்களின் விநியோகம் ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி சுட்டிக் காட்டினார்.
இந்தியாவில் இருந்து பொருட்கள் இறக்குமதியை டெஸ்லா நிறுவனம் இரட்டிப்பாக்க உள்ளது. எலான் மஸ்க் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பதிவிட்டார்.
இந்நிலையில், பியூஷ் கோயலுக்கு பதிலளித்த எலான் மஸ்க்,
டெஸ்லாவுக்கு நீங்கள் வருகை தந்தது கவுரவம் அளிக்கிறது. கலிபோர்னியாவுக்கு என்னால் வர முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். வரும் காலத்தில் உங்களை சந்திக்கும் ஒரு நாளை எதிர்பார்த்து இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.