மட்டு சுவிஸ் கிராமம் பகுதியில் உள்ள வீடொன்றில், வடிசாராயம் தயாரித்து வெளி இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிக்கொண்டிருந்த பெண்ணொருவரை கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், வடிசாராய கேன் இரண்டையும் மீட்டுள்ள சம்பவம் நேற்று 16 இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்தவர் எனவும், சுவிஸ் கிராமத்திலுள்ள அவரது கணவனுடைய வீட்டிலே வடிசாராயம் காய்ச்சி வெளி இடங்களுக்கு அனுப்புவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.