Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு- கிழக்கு தமிழர்களுக்கு உரியது என்றால் தென்னிலங்கையில் ஏன் வசிக்கிறீர்கள்; கம்மன்பில கேள்வி!

வடகிழக்கு காணாமலாக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கை மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்; உதய கம்மன்பில!

3 years ago
in செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோருக்கு நிவாரணம் வழங்குவதை போன்று தென்னிலங்கைக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடிக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

இவ்வாறான நிலையில் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கற்பனை உலகை வரையறுத்ததாக காணப்படுகிறது.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளன.

அரச வருமானத்தையும் தேசிய உற்பத்திகளையும் மேம்படுத்த எவ்வித திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவில்லை. போலியான வாக்குறுதிகள் மாத்திரம் மிதமிஞ்சியுள்ளன.

காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரது உறவுகளுக்கு நட்டஈடு அல்லது இழப்பீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தெற்கு மாகாணத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஏனெனில் 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலவரங்களினால் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயுள்ளார்கள்.

ஆகவே தென்னிலங்கையிலும் காணாமல் போனோரது உறவுகள் இன்றும் உள்ளார்கள் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பொருளாதார பாதிப்பை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ளாமல் இருப்பதை போன்று தொழிற்சங்கங்களும் அறியாமல் இருப்பது கவலைக்குரியது.

தற்போதைய நிலையில் 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரி போராட்டத்தில் ஈடுபடுவது முறையற்றது.

இவர்களின் கோரிக்கைக்கு அமைய நாணயம் அச்சிட்டு சம்பளம் அதிகரித்தால் அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ஆகவே அரச வருமானத்தை அதிகரிக்கவும், வரி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
“கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் இடம்” என்னும் தொனிப்பொருளில் முக்கிய கலந்துரையாடல்!

"கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் இடம்" என்னும் தொனிப்பொருளில் முக்கிய கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.