‘கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் இடம்’; என்ற தொனிப்பொருளில் ஏ.எச்.ஆர்.சி.எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்று (16) கோறளைப்பற்று பரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பேத்தாழை பொது நூலக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உள்ளுர் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக அமைப்புக்கள்,உள்ளுராட்சி சபை உத்தியோகஸ்த்தர் ஆகிய 3 பங்குதாரர்களையும் ஒன்றினைத்து, உறவை வலுப்படுத்துவதன் மூலம் உண்மைத்தன்மை,வெளிப்பாட்டு தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்கின்ற அடிப்படையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச சபையினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் மக்கள் சேவை தொடர்பான பணிகள் என்பன தொடர்பாகவும் பிரதேசத்தில் நாளாந்தம் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
இதன்போது பிரதேசசபை தொடர்பான விடயங்களுக்கு தீர்வுகளை பிரதேச சபையின் அதிகாரிகள் வழங்கியிருந்தனர்.ஏனைய விடயங்களுக்கு தீர்வு பெற குறித்த திணைக்களங்களை நாடுதல் என கலந்துரையாடப்பட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளை ஆராயும் இக் கலந்iதுரையாடல் ஒவ்வொரு 45 நாட்களுக்கு ஒரு முறையும் 3 ஜனனாயக பங்கு தாரர்களையும் ஒன்றினைத்து கலந்துரையாடலை ஏற்படுத்துவதன் ஊடாக மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதும் பிரதேச சபையுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்துவதும் வெளிப்படைத் தன்மை உடைய செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
இந் நிகழ்வில் வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் இசைதீன்,கலந்துகொண்டார்.
அத்துடன் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் அ.ஹாரூன்,கோறளைப்பற்று பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.வசந்தன், ஏ.எச்.ஆர்.சி நிறுவனம் சார்ந்த பிரதி இணைப்பாளர் அ.மதன் ஆகியோர்கள், பிரதேசத்தில் உள்ள சன சமூக நிலைய உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள்,பிரதேச சபையின் உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் ஏ.எச்.ஆர்.சி.நிறுவனத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.