Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொடர்ச்சியான மின் விநியோகம்; இலங்கையில் மிதக்கும் அணுமின் நிலையம்?

தொடர்ச்சியான மின் விநியோகம்; இலங்கையில் மிதக்கும் அணுமின் நிலையம்?

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

2032 ஆம் ஆண்டளவில், நாட்டிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக மிதக்கும் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணுசக்தி சட்டத்தை தயாரிப்பதற்காக இலங்கை வந்துள்ள சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணுசக்தி சபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தற்போதைய சட்டத்தின்படி, இலங்கை அணுமின் நிலையத்திலிருந்து மின்சார விநியோகத்தைப் பெற வாய்ப்பில்லை.

அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டத்தை மாற்றுவதற்கான வரைவுகளைத் தயாரிப்பதே முதலில் செய்யப்பட வேண்டும்.

சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் சட்ட விவகார அலுவலகத்தின் அணுசக்தி மற்றும் ஒப்பந்தச் சட்டப் பிரிவின் தலைவர் அந்தோனி வெதரோல் உட்பட நான்கு பிரதிநிதிகள், அதற்கு உதவுவதற்காக அண்மையில் நாட்டுக்கு வந்தனர்.

கொழும்பு துறைமுக நகரம், இலகுரக ரயில் உள்ளிட்ட நாட்டின் புதிய திட்டங்களுக்கு தொடர் மின்சாரம் தேவை.

இதற்கு அணுசக்தி மின்சார வழங்கல் மிகவும் பொருத்தமான தெரிவாகும் இலங்கை அணுசக்தி சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆர்.டி.ரோசா தெரிவித்தார்.

இதற்கமைய, 400 மெகாவோட் திறன் கொண்ட மிதக்கும் அணுமின் நிலையம் குறித்து இலங்கை கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார்.

தொடர்புடையசெய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!
செய்திகள்

விரிவுரையாளர் பற்றாக்குறை நெருக்கடி; நாளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தம்!

September 8, 2026
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!
செய்திகள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை!

September 8, 2026
பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!
செய்திகள்

பாடசாலை சேர்க்கைக்காக இலஞ்சம் பெற்ற காலி அதிபர் கைது!

September 8, 2026
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
Next Post
மட்டு கிரான் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!

மட்டு கிரான் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு