மகாவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 இலட்சம் காணி துண்டுகளில் எந்த தமிழருக்கும்
ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள்
துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன். பால சுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பனமிக வேகமாக செயல்படுகின்றன. தமிழ் மக்களின்
பூர்வீக விவசாய நிலங்கள், வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்குப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி, அந்தத் தமிழர்களை காணி அற்றவர்களாக்குவதே இந்தத் திணைக்களங்களின்ன் திட்டமாகும்.
யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென்னிலங்கை திட்டத்தை அரங்கேற்றி வருகிறது. மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம், பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.
மகாவலி எல் வலயத்தில் உள்ளடங்கும் முல்லைத்தீவு மாவட்டம், வெலி ஓயா பகுதியளவில் அல்லது முழுதாக
சிங்கள மக்களையே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர்காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்பட
வில்லை. இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இந்து சமயத்தில் இருக்கின்ற பல் வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து வலுவான ஓர் அமைப்பின் கீழ்
செயற்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என்று அண்மையில் நல்லை ஆதினத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.