நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அத்துடன் புத்தர் தெரிவித்த சகவாழ்வு கதையை தெரிவித்த ஜனாதிபதி, வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு கடந்த முறையைவிட அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளார் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்
ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தமீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு
தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்-ஜனாதிபதி தனது வரவு,செலவு திட்ட உரையின்போது
புத்த பெருமான் தெரிவித்த சகவாழ்வுப் போதனை ஒன்றை தெரிவித்திருந்தார்.சிக்கனமாக வாழப் பழகிக்
கொள்ளவேண்டும் என்பதையே இதன் மூலம் அவர் தெரிவிக்கவருகிறார். ஆனால் வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதிசெயலகத்திற்கு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே இந்த முறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் கல்விக்கு கடந்த முறையைவிட குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் கொள்கைக்கமைய நாட்டின் மொத்த வருமானத்தில் 5வீதம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இம்முறை 2 வீதத்துக்
கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பமாக மோசடிகளை நிறுத்தவேண்டும். சீனி மோசடி தொடர்பாக எந்த நட வடிக்கையும் இல்லை. சீனிக்கான வரியை ஒரு இரவில் 50 ரூபாவில் இருந்து
25 சதத்துக்கு குறைத்தார். குறிப்பிட்ட ஒரு சில வியாபாரிகளுக்காகவே இதனை அவர் செய்தார். ஆனால் தற்போது ரணில் விக்கிரமசிங்க 25 சதத்துக்கு இருந்த வரியை ஒரு இரவில் 50 ரூபாவாக அதிகரித்துள்ளார். இதனால் ஒரு சில சீனி இறக்குமதியாளர்கள் நன்மையடைகிறார்கள்-என்றார்.