ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
இதுத் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் விடுத்த அறிக்கையில் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ. எஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிடும் அமெரிக்க மற்றும் அதன் கூட்டு நாடுகளின் வீரர்களுக்கு ஆபத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வரும் கே.எஸ்.எஸ் என்ற ஈரான் ஆதரவு இயக்கம் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த இயக்கத்துடன் தொடர்புடைய ஆறு பேரை சர்வதேச தீவிரவாதிகளாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.