காலி – உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அளுத்கம வீதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய நிஹால் ரஞ்சித் மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேகநபரிடம் இருந்து 75 போதைமாத்திரைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.