தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய நடிகை குஷ்பு யாழ்ப்பாணத்திற்கு வந்தால் அவருக்கு துடைப்பக் கட்டையால் ஆசிர்வாதம் வழங்கப்படும் அத்துடன் அதைவிட கழிவு பொருட்களாலும் அவருக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும் என வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (18) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நடிகை குஷ்பு அவர்கள் விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என தெரிவித்திருக்கின்றார். இது ஒரு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
அவரது இந்த கருத்தானது எம்மவர்கள் மத்தியில் தாக்கத்தினையும் மிகுந்த ஒரு ஏமாற்றத்தினையும் தந்துள்ளது.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாத இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள் இராணுவ உதவி கேட்டு இந்தியாவிற்கு சென்றிருந்தார்.
அந்த நேரம் இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரதமர் ராகுல் காந்தி அவர்கள், ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் தங்களை விட்டு வேறு நாடு அதாவது குறிப்பாக சீனாவிற்கு சென்று விடக்கூடாது என்ற வகையில், எங்களது நலனையும் கருத்தில் கொள்ளாது சிங்கள மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர் கேட்ட ரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ஒப்புக்கொண்டார்.” என்று தெரிவித்திருந்தார்.