Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலை தொடர்பு கொண்ட இந்திய மத்திய நிதி அமைச்சர்; உடனடியாக 22 பேர் விடுதலை!

ரணிலை தொடர்பு கொண்ட இந்திய மத்திய நிதி அமைச்சர்; உடனடியாக 22 பேர் விடுதலை!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தலையீட்டின் பேரில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள், உடனடியாக நேற்று நள்ளிரவே அவர்களின் படகுகளுடன் விடுவிக்கப்பட்டு தமிழகத்துக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து, கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்துக்காக நேற்று மதியம் 22 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று மாலை 5 மணிக்கு காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அவர்கள், அவர்களின் படகுகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செய்தி இராமேஸ்வரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதேநேரம் இராமேஸ்வரத்துக்கு இரு நாள் பயணமாக இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்ற நிலையில், கடற்றொழிலாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கைதான தமது உறவுகளை அவர்களின் படகுகளுடன் உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்றொழிலாளர்களின் கோரிக்கையின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தொடர்பு கொண்ட இந்திய நிதி அமைச்சர், கடற்றொழிலாளர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

அதனையடுத்து 22 கடற்றொழிலாளர்களையும் கையோடு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களது படகுகளில் அவர்களை ஏற்றி அவர்களை இலங்கையின் கடல் எல்லை வரை இலங்கைக் கடற்படையினர் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கிருந்து இன்று அதிகாலை தமிழகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்!

தமிழர்களின் கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது குஷ்புவின் யாழ் விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு