பல்பொருள் அங்காடிகளில் சீனி வகைகளில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிகப்பு சீனியுடன்வெள்ளைச் சீனி கலக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை
உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து வர்த்தக விவகார அமைச்சர் கவனம் செலுத்தவேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஒரு கிலோ கிராம் வெள்ளைச் சீனியின் விலை 220 ரூபா எனவும், சிவப்புச் சீனி ஒரு கிலோ கிராமின் விலை 360 ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளைச் சீனியுடன் சிவப்புச் சீனியை கலந்து கூடிய விலைக்கு சிவப்பு சீனி என விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சிவப்புச் சீனியை கொள்வனவு செய்ய மக்கள் நாட்டம் காட்டுகின்றனர்.
பல்பொருள் அங்காடிகளில் இவ்வாறான மோசடிகள் இடம் பெற்றால், ஒவ்வொரு பல்பொ ருள் அங்காடிக்கு எதிரிலும் போராட்டம் நடத்த நேரிடும் என அசேல சம்பத் கூறினார்.