மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்
(25) முன்னெடுக்கப்பட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் வெல்லாவெளி பொலிஸாரினால் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதுடன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று (25.11.2023) உத்தரவிட்டுள்ளார்.