Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் போல் நடித்து பலரிடம் பணம் பெற்றவர் கைது!

பெண் போல் நடித்து பலரிடம் பணம் பெற்றவர் கைது!

3 years ago
in செய்திகள்

சமூக வலைத்தளங்களில் ஆண்களையும் பெண்களையும் ஏமாற்றிய பணம் கொள்ளையடிக்கும் நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

பெரியளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

தனியார் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பணம் பரிமாற்றம் செய்யப்படுவதாக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் மோசடி விசாரணைப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.

குறித்த கணக்கு மூலம் குறுகிய காலத்திற்குள் பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைமாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட உரிய பிரிவினர் இந்தக் கணக்கு வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.

பின்னர் விசாரணை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கணக்கில் பணத்தை வரவு வைத்த ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

அங்கு அவர் TAGGED எனப்படும் ஒன்லைன் கணக்கு மூலம் ஒரு பெண்ணுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதாகவும், பின்னர் அவரது வேண்டுகோளின் பேரில் பல முறை வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைத்ததாகவும் கூறினார். எனினும், அவர் தன்னை சந்திக்காததால் அந்த உறவை முறித்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, குறித்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்திய நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், TAGGED என்ற கணக்கின் மூலம் பெண் போல் நடித்து ஆண்களிடம் அதிகளவில் பணம் வாங்கியதாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும், குறித்த கணக்கு மூலம் ஆண் போன்று நடித்து பல பெண்களிடம் பணம் பெற்றதாகவும் சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன்!

8 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு