சிறுபோக நெற்செய்கைக்கான உர மானியம் வழங்கல் தொடர்பாக விவசாய அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, உர விநியோகத்திற்காக ஹெக்ரெயார் ஒன்றுக்கு 20 000 ரூபா வீதம் உயர்ந்தபட்சம் இரண்டு ஹெக்ரெயார்களுக்கு நிதி மானியத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் 40 000 ரூபா நிதி மானியம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.