முட்டையை இன்று முதல் கிலோக் கணக்கில் விற்பனை செய்யப்படவுள்ளது என்று முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று முதல் முட்டையை கிராமுக்கு ஒன்றுக்கு 80 சதம் விலையில் விற்பனை செய்ய தீரமானிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதன்படி, மத்திய மாகாணத்தில் முதன் முதலாக இன்று முட்டை கிலோக் கணக்கில் விற்பனை செய்யப்பட்டது.””முட்டையை கிலோ கணக்கில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இந்திய முட்டையை வாங்கினால், பேக்கரி உரிமையாளர்களுக்கு கிராம் ஒன்றுக்கு 85 சதம் முடியும். நாம் நாளை முதல் கிராம் ஒன்று 80 சதத்துக்கு வழங்குவோம். வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு கேக்கிற்கு 10 இந்திய முட்டைகள் தேவை என்றால் எமது முட்டைகள் 6 அல்லது 7 போதும். இதனை மத்திய மாகாணத்தில் இருந்து தொடங்குகின்றோம்” என்றார் அவர்.