வவுனியாவில் மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பதாதைகளை காட்சிபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதனை அகற்ற முற்பட்ட முன்னாள் போராளி அரவிந்தன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்புடன் பதாதைகள் மீளவும் வைக்கப்பட்டது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் சில வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் குறித்த பகுதிக்கு சென்று இவற்றை இங்கு யார் வைத்தது இதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கிருந்த இருவர் தாங்களே இதனை வைத்ததாகவும் இப்படி செய்யுமாறு சிலர் பணித்தமையால் இதனை செய்தோம்.
அதனைவிட வேறு எதுவும் தமக்கு தெரியாது என்று கூறியதுடன், பதாதைகளையும் அகற்றினர்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் பதாதைகளை வைத்தவர்களின் மீது நடவடிக்கையினை எடுக்காமல். முன்னாள் போராளியான அரவிந்தனை அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.