Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் விஜயம்!

மட்டு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் விஜயம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களது அழைப்பின் பேரில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு 150 வருட பழமைவாய்ந்த பாடசாலையினை பார்வையிட்டுள்ளார்.

இதன்போது புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் ஏ.வீ.ஜோசப் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் (Sandile Edwin Schalk ) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையில் 150 வருட வரலாற்றை எடுத்துக் கூறும் நூற்றாண்டு விழா நூலொன்றும் இதன்போது உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதனவாசன் மற்றும் உயர்ஸ்தானிகரின் செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இலங்கை மக்களுடன் தென் ஆபிரிக்க நாடு நல்லிணக்கத்துடன் செயற்படுவதாக இதன் போது உயர்ஸ்தானிகர் குறித்த நிகழ்வில் உரையாற்றும் போது கருத்து தெரிவித்ததுடன், புனித மிக்கேல் பாடசாலைக்கு ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதன் போது கருத்து தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
வெளிநாடொன்றில் கோடிக்கணக்கில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள அமைச்சர்; அம்பலப்படுத்திய புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு!

வெளிநாடொன்றில் கோடிக்கணக்கில் சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள அமைச்சர்; அம்பலப்படுத்திய புலனாய்வு பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு