வருடாந்த வருமான அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுமெனவும், செலுத்த வேண்டிய வரியில் 5 வீதம் தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வருடம் ( 2023) மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான மதிப்பீட்டு வருடத்திற்கான வருமான அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கை நேற்றுடன்(30.11.2023) முடிவடைந்தாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வருமான அறிக்கையை வழங்காதவர்களிடம் இருந்து 50000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.