எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
வரி வலையமைப்பை விரிவுபடுத்தி வரி செலுத்தக்கூடிய மக்களை உள்ளடக்குவது மாத்திரமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்டில் வரி விதிப்பு முறை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான யோசனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்ற வதந்திகள் பொய்யானவை எனவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.