சிறி லங்கா பொதுஜன பெரமுன நாட்டுக்கான புதிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முன்வைக்கவுள்ளதாக கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பல தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த 5 வருடங்களுக்கு நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை கட்சி உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாட்டில் மேலும் பொருத்தமான முன்மொழிவுகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.