தனது ஆண் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தபட்டதாக கூறப்படும் 16 வயதுடைய சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது.
குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் அவரின் தந்தை சிறுமி பிறக்கும் முன்னரே குடும்பத்தை கைவிட்டு சென்றதாகவும் விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சிறுமி 70 வயதான தமது பாட்டியுடனேயே வசித்து வந்தார்.
பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி அவருடைய ஆண் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் தமது நண்பியிடம் நடந்த சம்பவத்தை குறுஞ் செய்தியொன்றின் மூலம் தெரிவித்துள்ளதுடன் தற்கொலை முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அவருடைய ஆண் நண்பரை கைது செய்துள்ளனர்