விடுதலைப் புலிகளின் தொடர்புகள் காரணமாக ஹரக்ஹட்டா தனியார் விமானம் ஒன்றைப் பயன்
படுத்தினார் என்று நீதிமன்றத்தில் சி. ஐ. டி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விடுதலைப் புலிகளுடன் நேரடிதொடர்புகளை கொண்ட ஒருவர் வழங்கிய நிதியை பயன்படுத்தியே ஹரக்ஹட்டாவும் குடு சலிந்துவும் தனியார் ஜெட் விமானங்களை பயன்படுத்தினார்கள் என்று பாணந்துறை நீதிமன்றத்துக்கு சி. ஐ. டி. குற்ற அறிக்கை அளித்துள்ளுது.விடுதலைப் புலிகளுடன் நேரடி தொடர்பை கொண்டுள்ள ஹேர்பி என அழைக்கப்படும் நிர்மன பண்டார என்பவரிடமிருந்து பெற்ற விமானத்தை பயன்படுத்தியே இருவரும் மடகாஸ்கர் சென்றுள்ளனர் என்றும் சி. ஐ. டியினர் தெரிவித்துள்ளனர்.
ஹரக் கட்டா
இந்த நாட்டை சேர்ந்து பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும்,பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பிரதான பாதாள உலகக் கும்பலின் தலைவருமான ‘ஹரக் கட்டா’ உட்பட 8 பேர் மடகாஸ்கரில் உள்ள இவாடோ விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர் .
நந்துன் சிந்தக என்ற “ஹரக் கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிக என்ற “குடு சலிந்து” ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஹரக் கட்டாவின் மனைவியும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வர விசேட குழு ஒன்று அங்கு சென்று இவர்களை இங்கு கொண்டு வந்து சி ஐ டி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.