எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தில்ஷான் மதுஸங்க அதிக விலைக்கு வாங்கப்படலாம் என இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரான கௌதம் கம்பீரின் பார்வை இம்முறை தில்ஷான் மதுஸங்க மீது இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தில்ஷான் மதுஸங்க ஆறு முதல் எட்டு கோடிக்கு ஏலத்தில் விற்கப்படலாம் எனவும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ளது.
இந்த ஏலத்தில் மொத்தமாக 1,166 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 830 இந்திய வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் அடங்குகின்றனர்.








