பொகவந்தலா டின்சின் 51 கம்பி சந்தியில் மண் சரிவினால் பொகவந்தலாவ ஹட்டன் பாதை முற்றாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனங்கள் போக்குவரத்து தாமதமாகலாம். இதனை அகற்றும் அவ் வீதியூடாக வாகனங்கள் செல்ல முடியாது எனவும் , ஹட்டனிலிருந்து வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மண் திட்டு சரிவு ஏற்பட்ட பகுதியில் நிருத்தப்பட்டு மாற்று வாகனங்கள் மூலம் பயணம் செய்யும் பணியில் உள்ளனர் என பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.