காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காசோலைகள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழி காட்டலில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறிதர் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பயனாளிகளுக்கு தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அலியார், காத்தான்குடி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் உட்பட பிரதேச செயலக சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.