அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ தொடர்ச்சியாக உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் ஆய்வுகளை நடத்தி இந்த பட்டியலை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
அதன்படி இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி 76 சதவீத ஆதரவுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக முதலிடம் பிடித்துள்ளார். பல காலமாகவே இந்த பட்டியலில் பிரதமர் மோடி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் அடுத்த நான்கு இடங்களை முறையே மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் (66%), சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் (58%), பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா (49%), ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (47%) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.