கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் தலைமை பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்புவேளி காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உப்புவேளி காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, 17 போதை மாத்திரைகள், 80 மில்லி கிராம் கஞ்சா, 04 கையடக்கத் தொலைபேசிகள், 02 எரிவாயு சிலிண்டர்கள், மற்றுமொருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் நான்கு தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டதோடு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆனந்தம்குளம் சோமரதன என்ற பிக்கு 4 ஆம் கட்டை என்ற பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விஹாராதிபதியாக பதவி வகித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.