2 இலட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த திறைசேரி உண்டியல்கள் நாளை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளன.
அத்துடன் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.