கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண் தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வு நேற்று (13.12.2023) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பளை பிரதேச கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த நிகழ்வில் தென்னை பயிர் செய்கை அதிகளவில் மேற்கொள்ள எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக காட்சிபடுத்தப்பட்டு கள உத்தியோகத்தர்களிடம் அதற்கான தீர்வுகளும் கேட்டறியப்பட்டது.
வடமாகாணத்தில் இராணுவத்தினரிடமும்,வனஜீவராசிகள் திணைக்களம்,மற்றும் தரிசு நிலங்கள் உள்ளடங்களாக ஏறத்தாழ 40000 ஏக்கர் காணிகள் உள்ளதோடு காணிகளை தென்னை பயிர்ச்செய்கைக்காக விடுவித்தால் 66.35மில்லியன் தேங்காய்கள் வழங்கி அதன்மூலம் 5828மில்லியன் ரூபாய் தேசிய வருமானமாக பெறலாம் என கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தென்னை சார்ந்த சுற்றுலா மையங்களினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த பண்ணைகளை அமைத்தல். வெளிநாட்டு முதலீட்டாளர்களை தென்னை சார்ந்த தொழிற்துறைகளை ஆரம்பிக்க ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.