டெஸ்லா நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய, மனித வடிவிலான ரோபோட்டின் வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டெஸ்லாவின் “ஆப்டிமஸ் ஜென் 2” எனப்படும் மனித வடிவிலான ரோபோட் மனிதர்களை போலவே செயல்பட கூடியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்ட ஆப்டிமஸ் ஜென் 2 வின் முன்மாதிரியை விட இது அதிக செயல்திறன் கொண்டதாக காணப்படுகிறது. சுமார் 10 கிலோ எடை கொண்ட இந்த ஆப்டிமஸ் ஜென் 2 ரோபோட் மனிதர்களை விட 30% வேகம் கொண்டது. மேம்படுத்தப்பட்ட இந்த ரோபோட் வேகமாக நடப்பது, கை வீசுவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்டின் சோதனை வீடியோவை எலான் மஸ்க் நேற்று முன்தினம் 13 தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ஆப்டிமஸ் ஜென் 2 ரோபோட்கள் சோதனை செய்யப்படுவது காட்சிகள் பதிவாகியிருந்தன. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் பலபலப்பான தோற்றம் கொண்டதாக உள்ளது ஆப்டிமஸ் ஜென் 2 ரோபோட்.