Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மருத்துவ பீட மாணவனின் தாடி விவகாரம் ; கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

மருத்துவ பீட மாணவனின் தாடி விவகாரம் ; கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி தாடி வைத்துக் கொண்டு தனது இறுதியாண்டுக் கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டமைக்கு காரணமான பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு எதிராக நேற்று முன்தினம் (14) இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று(15) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட மாணவர் சார்பாக சட்டத்தரணி சுரேன் ஜானராஜ் மற்றும் சட்டத்தரணிகள் றுடானி ஸாஹிர், றஷாட் அஹமட் மேர்வின் தயாளன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தாடி விவகாரத்தில் இன்னொரு மாணவர் வழக்குத் தொடர்ந்து இடைக்கால உத்தரவொன்று அமுலில் இருக்கும் நிலையில், மீண்டும் பிரதிவாதிகள் தாடி வைத்திருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைத் தடுக்கின்றனர் என்ற விடயம் நீதியரசரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட இறுதியாண்டு மாணவரான ஸஹ்றியை பிரதிவாதிகள் தாடி வைத்திருந்த ஒரே காரணத்திற்காக வைத்தியசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுத்தும் விரிவுரைகளில் பங்கு பெறுவதைத் தடுத்தும் வந்திருந்தனர்.

எத்தனை முயற்சிகள் எடுத்தும் அவர்கள் பிடிவாதம் அவர்களை விடவில்லை. எந்தவித அடிப்படையும் இல்லாமல் அப்பட்டமான மனித உரிமை மீறலை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இப்பேராசிரியர்கள் மீறி உள்ளனர். முஸ்லிம்களின் கலாச்சார அடையாளமான தாடி வைப்பதைத் தடுப்பதில் முன் நிற்கின்றனர். வழக்கினை செவியுற்ற நீதிமன்றம் மனுவில் கோரிய இடைக்கால நிவாரணத்தினை உடனே வழங்கியது.

குறிப்பிட்ட நிவாரணத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான மணிகண்டு திருக்குமார், பேராசிரியர் கருணாகரன் மற்றும் கிழக்குப் பல்கலைகழக நிர்வாகம் குறிப்பிட்ட மாணவரை வைத்தியசாலையில் நடைபெறும் Clinical Clarkshipல் பங்கு பற்றுவதில் இருந்தும், களவிஜயங்கள் செல்வதில் இருந்தும் ஏனைய பரீட்சைகளில் இருந்து தோற்றுவதில் இருந்து தடுக்கும் பல்கலைக்கழகத்தின் முயற்சிக்கு எதிராக தடை உத்தரவினை வழங்கி உள்ளது.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
கைவரிசை காட்டிய சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கைவரிசை காட்டிய சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு