கல்குடா வலய சைவக் குருமார் சங்கத்தினால், கல்குடா வலய பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குருமார் சங்கத் தலைவர் சிவஸ்ரீ கா.கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் இவ் நிகழ்வு சந்திவெளியிலுள்ள கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது. கல்குடா வலய சைவக் குருமார் ஒன்றியம் ஆரம்பிக்ப்பட்டதன் முதல் நிகழ்வாக இவ் மனிதய நேய உதவி கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.அத்துடன் சைவக்குருமார்களுக்கான ஒழுக்கத்தை பேனும் பொருட்டும்,சங்கத்தினை வளர்சி பாதையில் முன்னெடுக்கும் முகமாக சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அதிதிகளாக சிவஸ்ரீ எம்.சண்முகம் குருக்கள், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு,கல்குடா கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் கே.ஜெயவதனன்,காலாச்சார உத்தியோகஸ்த்தர்.ப.சிவராம் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இவ் நற்பணி சேவையானது திருகோணமலை ஆலங்கேணி அருள் மிகு அரி ஓம் சிவசக்தி லக்ஷமி நாராயணர் ஆலய ஸ்தாபகரும் சைவகுருமார் சங்க ஆலோசகருமான சிவத்திரு மார்கண்டு ரெட்ணசிங்கம் பன்னீர் செல்வம் சிவத்திரு பொட்டு காளி ஜயா அர்களின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இவ் நற்பணி சேவை இந்து குருமார் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.