செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜாங்கே வெங்க்கே என்பவர் யாயி 2.0 என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வடிவமைத்துள்ளார்.
முந்தைய செயற்கை நுண்ணறிவு பதிப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட இந்த மாதிரியானது முழுமையாக தனித்து இயங்கும் தன்மையை கொண்டுள்ளது.
இது பயனர்களின் உரையாடல் நோக்கத்தை திறம்பட அடையாளம் கண்டு, எழுத்து மற்றும் புகைப்படங்கள் வாயிலாக பதிலளிக்கும் என்று ஜாங்கே வெங்க்கே தெரிவித்துள்ளார்.
2 இலட்சம் எழுத்துக்களை உள்ளீடாக ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டுள்ள இந்த சாதனம், சில வினாடிகளில் பதிலளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், PDF வடிவிலான ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்தல், வானிலை முன்னறிவிப்பு, கணிப்புப் பொறி உள்ளிட்ட கருவிகளின் பயன்பாட்டை செயற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.