தேசிய ரீதியில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி. மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இலங்கை பாடசாலைகள் சங்கத்துடன் இணைந்து அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட
உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில், கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிகள் இறுதிப் போட்டியில் மோதின இப்போட்டியில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி சம்பியனானது. தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றுள்ள சாதனை படைத்துள்ள ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமானவின் ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்.பி. லியனகே தலைமையில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன கலந்துகொண்டு மாணவர்களுக்கான நினைவுப் பரிசில்களை வழங்கினார்.
நிகழ்வில் ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி பிரதி அதிபர் எம்.எம்.மொயிதீன், கல்லூரி உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரும் உடற் கல்வி ஆசிரியருமான ஹஸ் பான், கல்லூரி பழைய மாணவனும் இலங்கை இராணுவத்தின் லெப்டினன் கேணல் தர அதிகாரியுமான அனாஸ், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஹர்ச த சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.