Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இமாலய பிரகடனம் மீண்டும் ஒரு ஏமாற்றும் அரசியல் முயற்சியா?

இமாலய பிரகடனம் மீண்டும் ஒரு ஏமாற்றும் அரசியல் முயற்சியா?

1 year ago
in அரசியல், சிறப்பு கட்டுரைகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த வாரம் இலங்கை அரசியல் அரங்கில் இமாலய பிரகடனம் என்ற சொற்பதமும், அதன் உள்ளடக்கமும் பாரிய விவாதங்களை தோற்றுவித்துள்ளது.
அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்”கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்தவாரம் குறித்த பிரகடனமானது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ. சுமந்திரன் , இரா.சாணக்கியன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் போன்றோரும் கலந்து கொண்டனர். இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இது தற்போது பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

இந்த இமாலய பிரகடனம் என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

உலகத் தமிழர் பேரவையும் சிறந்த இலங்கைக்கான சங்கங்கள் (Sangha for Better Sri Lanka) என்ற அமைப்பும் கூட்டாக எடுத்த முயற்சியின் பலனாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு உரையாடல் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்தது. அதன் பலனாக 27 ஆம் திகதி ஏப்ரல் 2023 அன்று நேபாளத்திலிருக்கும் நாகர்கோட் என்னுமிடத்தில் உருவாக்கப்பட்ட பிரகடனமே ‘இமாலயப் பிரகடனம்’ ஆகும்.

ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும், சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை நாடு” உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், மறுசீரமைப்பு, சமூக நலன் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட 06 முக்கிய விடயங்களை “இமயமலைப் பிரகடனம்” உள்ளடக்கியுள்ளது.

1வது கூற்று
தங்களுடைய அடையாளம் மற்றும் பெருமையை இழந்துவிடுவோமா என்ற பயம் எந்த ஒரு சமூகத்திற்கும் ஏற்படாத வகையில் நாட்டின் பல்வகைமைத்தன்மையைப் பேணிப் பாதுகாத்தலும், ஊக்குவித்தலும்.

2வது கூற்று
பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளல். உள்நாட்டு உற்பத்தியையும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் ஏனையோரின் முதலீடுகளையும், பங்களிப்பையும் ஊக்குவிக்கக்கூடிய, இலங்கை ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாக வெற்றிப் பாதையில் செல்வதனை உறுதிப்படுத்தக்கூடிய பொருத்தமான அபிவிருத்தி மாதிரிகளைத் தெரிவு செய்தல்.

3வது கூற்று
மாகாண மட்டத்தில் போதுமானளவு அதிகாரப்பகிர்வினை உறுதிப்படுத்தியும், தனிநபர் மற்றும் கூட்டு உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கக்கூடிய, சமத்துவம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான குடியுரிமையை முன்னிலைப்படுத்தியதும் அதற்கான பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களை உள்ளடக்கியதுமான ஒரு அரசியலமைப்பை உருவாக்குதல், அதுவரை நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பில் உள்ளவாறான அதிகாரப்பகிர்வினைக் கண்ணியத்துடன் நடைமுறைப்படுத்தல்.

4வது கூற்று
ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டினுள் அதிகாரத்தைப் பகிர்தலும், மத, கலாச்சார மற்றும் ஏனைய அடையாளங்களை ஏற்று அத்தகைய அடையாளங்களுக்கு மதிப்பளிப்பதோடு இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப உழைப்பதும்.

5வது கூற்று
கடந்த கசப்பான காலங்களில் இருந்து கற்றுக்கொள்ள உறுதிகொண்டு, மீண்டும் இவ்வாறான துயரங்கள் ஒருபோதும் ஏற்படாதிருக்கப் பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒப்புரவு அடைந்த ஓர் இலங்கைக்கான தூர நோக்கு,

6வது கூற்று
இரு தரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகளுக்கும் இதர சர்வதேசக் கடப்பாடுகளுக்கும் மதிப்பளித்து, சுயாதீனமான மற்றும் ஆற்றல் வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாக இலங்கையானது ஜனநாயகத்துடன் கூடிய சமாதானமான, வளமான உலக நாடுகள் மத்தியில் தனது பெருமையை நிலைநாட்டுதல்.

என்னும் 6 கூற்றுகளை உள்ளடக்கியதாக இந்த இமாலய பிரகடனம் காணப்படுகிறது.

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் எத்தனையோ பிரகடனங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை காலப்போக்கில் நீர்த்து போனவையாகவே உள்ளன. இலங்கையின் இன பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில்
மாத்திரம் இது என்ன விதிவிலக்கா என்றே எண்ணத்தோன்றுகிறது. மறுபுறம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அன்றி இன்றைய காலகட்டத்திற்கான அரசியற் தீர்வுக்காக உருவாக்கப்பட்ட ‘ஓர் பகடைக்காய் பிரகடனமாகவே’ இதனை பார்க்கத்தோன்றுகிறது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்திற்கொள்ளாத இப்பிரகடனத்திற்கு தமிழ் சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்புகள் எழுந்தவண்ணமுள்ளன.

அந்தவகையில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்திற்கொள்ளாத ‘இமயமலைப் பிரகடனத்தை’ வடக்கு – கிழக்கைச் சேர்ந்த மதத் தலைவர்கள், தமிழ் சிவில் – சமூக அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இணைந்து கூட்டாக நிராகரித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் உள்ளதாவது,

இமயமலைப் பிரகடனத்தை நாம் கவனமாக வாசித்தோம். ஆனால், இந்தப் பிரகடனம் தமிழ் மக்களின் கருத்துக்களையோ, இலங்கைத்தீவு சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தினால் அனுபவித்த துன்பங்கள், கொடுமைகளையோ கருத்திற் கொள்ளாமை தொடர்பில் நாம் எமது கடும் அதிருப்தியை வெளியிடுகின்றோம். வெளிப்படையாகவே பௌத்த மதகுருமார் தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பில் தெளிவற்றவர்களாகவே உள்ளார்கள்.ஏனெனில், அவர்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே சிங்களவர்களிடையே வாழ்கிறார்கள். மேலும் நாம் அனுபவித்த மற்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அடக்குமுறைகள் தொடர்பாக அவர்கள் எவ்வித கரிசனைகளையும் கொண்டிருக்கவில்லை.

14 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர், 2021 ஆம் ஆண்டு, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சியின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தியுள்ளோம். சிறிலங்கா இராணுவத்தின் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் கைதுகளுக்கு மத்தியிலும் ஏறக்குறைய சுமார் ஐந்து இலட்சம் தமிழர்கள் இணைந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை ஐந்து நாள் மக்கள் பேரெழுச்சி மூலம் தமிழ் இனத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தனர். தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்பட்ட அமைப்பினரும் பல போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தி தமிழர்களின் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவை எதுவும் இந்தப் பிரகடனத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை – என்றுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அதிலும் குறிப்பாக தமிழ் அரசியர் கட்சியினர் இலங்கை அரசியல் நாடகங்களில் தாங்களும் பாத்திரங்களை ஏற்று நடித்து கொண்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிருப்தியையும் அவநம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் அ. நிக்சன் கருத்துரைகையில், தமிழ் மக்களை சிறிலங்கன் என்ற அடையாளத்திற்குள் தொலைக்கவே இமாலயப் பிரகடனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் தலைமைகள் தமது கட்சியின் இருப்பு, தமது இருப்பு என்று இருக்காமல் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் இவ்வாறு இமாலயப் பிரகடனங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களை எவரும் ஏமாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

குறித்த பிரகடனம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் கூறுகையில் உலக தமிழ் பேரவையின் ஒரு முகமூடி சுமந்திரன், சம்மந்தன் இவர்கள் ஒற்றையாட்சியை பலப்படுத்தி அதற்குள் தமிழர்களை கொண்டு சென்று புதைத்து எதிர்காலத்தை இல்லாமல் செய்வதும் 13 ஆவது திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்த கோருவதும் இலங்கை அரசை ஒரு நியாயமான அரசாக காட்டுவது மட்டும் தான் இவர்களது நோக்கம் எனவே தமிழ் மக்கள் ஏமாந்து விடக்கூடாது என தெரிவித்திருந்தார். கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் பரபரப்பாக போய்கோண்டிருக்கும் விடயம் இந்த உலகத்தமிழர்களுடைய நாடகம் இந்திய மேற்கு நாடுகளின் கூட்டாக இயக்குநர்களாக இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மறைமுகமாக பாத்திரத்தை ஏற்று ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்றதுடன் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூடிய ஒரு லிபரர் வாதியாக காட்டி உலக நாடுகளில் இருந்து ரணிலுக்கு தேவைப்படுகின்ற நிதி உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு ஏமாற்று நாடகமாகும் என தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்கையில் நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, உலக தமிழர் பேரவை உறுப்பினர்களை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் பின்னால் உள்ள அரசியல் நகர்வுகளும் மிக பெரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக இப்பிரகடனத்தில் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படாமல் இருப்பது தாங்கள் இழைத்த குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவே மஹிந்த குழுவினர் இதை பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த இமாலய பிரகடனம் தமிழ் மக்களையும், அவர்களின் போராட்டங்களையும் காட்டிக்கொடுக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுவதாக பல்வேறு கருத்துக்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

வழமைபோல இதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தொடர்புடையசெய்திகள்

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
அரசியல்

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

May 15, 2025
காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்
செய்திகள்

காத்தான்குடி நகரசபை தவிசாளர், பிரதி தவிசாளர் நியமனம்

May 15, 2025
யாழில் ஆசிரியர் தாக்கியதில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்
செய்திகள்

யாழில் ஆசிரியர் தாக்கியதில் 5 பாடசாலை மாணவர்கள் காயம்

May 15, 2025
ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
செய்திகள்

ஓட்டமாவடி வீடொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

May 15, 2025
இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு
செய்திகள்

இந்த ஆண்டு நடந்த வீதி விபத்துகளில் மாத்திரம் 957 பேர் உயிரிழப்பு

May 15, 2025
ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்
செய்திகள்

ஹட்டன் பிரதான வீதியில் எரிபொருள் வாகனம் விபத்து- கசிந்த எரிபொருளை பிடிக்க முண்டியடித்த மக்கள்

May 15, 2025
Next Post
ஆபாச காணொளி பார்க்கும் நபர்களை கண்காணிக்கும் புதிய நடைமுறை!

ஆபாச காணொளி பார்க்கும் நபர்களை கண்காணிக்கும் புதிய நடைமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.