மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் திருச்சி வரை பயணித்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு ஆயத்தமான நிலையில் விமானத்தின் ஒரு சில்லில் காற்று இல்லாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பியதையடுத்து உடனடியாக விமானத்தை தரை இறக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர்.
அத்துடன், தீயணைப்பு வாகனங்கள் உற்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து விமானிகளும் திறன்பட செயற்பட்டு, வேக கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரை இறக்கி, விமானத்தில் பயணித்த 180 பயணிகளும் காப்பாற்றப்பட்துள்ளனர்.