லங்கா சதொசவில் 275 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரித்து 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அரசாங்க நிறுவனம் என்ற வகையில் மக்களுக்கு குறைந்த விலையில் சீனி வழங்குவதாக கூறி சுமார் இரண்டு வாரங்களாக ஒரு கிலோ சீனி 275 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 295 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், சாதாரண சந்தையில் ஒரு கிலோ வெள்ளை சீனி 290 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், அரச நிறுவனமான சதொச சாதாரண சந்தை விலையை விட அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்வதாகவும் பாவனையாளர்கள் தெரிவிக்கின்றார்.