ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்றைய தினம்(22) 12 புதிய நியமனங்கள் வழங்கி வைத்துள்ளார்.
அதன்படி 10 அமைச்சுக்களுக்கான செயலாளர்களுக்கும், இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களுக்கும் நியமனங்களை வழங்கிவைத்தார்.
மேலும் இந்த நியமனங்கள் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கல்வி அமைச்சின் செயலாளராக வசந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக எம்.என்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ. சி.முஹம்மது நஃபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக டபிள்யூ.பி.பி.யசரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
நீர்ப்பாசன அமைச்சின் புதிய செயலாளராக சமன் தர்ஷன படிகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.