ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய கடேற் பிரிவின் 142ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட நடைப்பவனியொன்று மட்டக்களப்பு நகரில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, தேசிய கடேற் பிரிவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரி லெப்படினன் கேணல் நிலந்த தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கடேற் அணியினரின் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மட்டக்களப்பு மத்திய கல்லூரியின் அதிபர் கே பாஸ்கர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ் .பண்டார உள்ளிட்ட பல அதிகாரிகளும் நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
இதனை தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய கடேற்பணியில் இணைந்து செயல்படும் பாடசாலை மாணவர்களின் விசேட பாண்ட் வாத்திய கண்காட்சியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.