வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டது. அத்துடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரின் விசேட போதை ஒழிப்பு நடவடிக்கையின்கீழ், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையி
லேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் விசேட பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாண சிரேஷ்டபிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகணவின் வழிகாட்டலில், மட்டக்களப்பு மாவட்டpரதி பொலிஸ் மா அதிபர் என்.பி.லியனகேயின் கண்கானிப்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போதையொழிப்பு சோதனை கள் இடம்பெறுகின்றன.
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமன்ன தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை துறைமுக பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இந்த கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அத்துடன், சந்தேகத்தினடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.