உலக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் தனது நாட்டை விட்டு அழுதபடியே வெளியேறி, இஸ்லாத்தை தழுவியுள்ளதாக இணையத்தில் புகைப்படம் ஓன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
“Jackie Chan convert to Islam real or fake” என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்,” உலக புகழ் பெற்ற ஜாக்கி சான் இஸ்லாத்தை தழுவினார்- பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் தகவல்” என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
*அந்த செய்தி பொய்யானது!
*அப்படியென்றால் எது உண்மை?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு மலேசியாவின் உயரிய விருதான டத்தோ விருது ஜாக்கிசானுக்கு வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
அப்போது அவர் மலேசிய பாரம்பரிய தொப்பி அணிந்திருந்தார். மேலும் பதக்கம் வாங்கியவுடன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் வகரி ஜமாலுடின் அவர்கள் ஜாக்கிசானுடன் புகைப்படம் எடுத்தார்.
இந்நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் அவர் 2015 ல் வாங்கிய டத்தோ விருது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து பலரும் ஜாக்கிசான் இஸ்லாத்தை தழுவி விட்டார் என பொய் பரப்பி வருகின்றார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.