Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்; சாணக்கியன் காட்டம்!

மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்; சாணக்கியன் காட்டம்!

3 years ago
in மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களுடைய முக்கிய நாட்களில் மறக்க முடியாத செயலை செய்து விட்டு நல்லவர் போல் நேற்று (25) கிறிஸ்துமஸ் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டமும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18 ஆவது நினைவு தினம் நேற்று மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 18வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

இதன்போது புனித மரியால் பேராலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டும்,படுகொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்து,கொலையாளிகள் சொகுசுவாழ்க்கை வாழ அனுமதித்தது யார் போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு ஊர்வலமாக வருகைதந்தனர்.

மட்டக்களப்பு,சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ,மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி புளோரிடா சிமியோன் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,மதத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி மனித புதைகுழி; மேலும் 8 என்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!

August 6, 2026
ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!
செய்திகள்

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!

August 6, 2026
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!
செய்திகள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்ட நிறுவனங்களின் புதிய பட்டியலை வெளியிட்டது மத்திய வங்கி!

August 6, 2026
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்!

August 6, 2026
மட்டக்களப்பு, மொனராகலையில் பிற்பகலுக்குப் பின் மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு, மொனராகலையில் பிற்பகலுக்குப் பின் மழைக்கு வாய்ப்பு!

August 6, 2026
அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
Next Post
தொடரும் பாதுகாப்பும் தேடுதல் நடவடிக்கையும்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

தொடரும் பாதுகாப்பும் தேடுதல் நடவடிக்கையும்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு