செம்மணி மனித புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நேற்று (5) 44ஆவது நாள் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 8 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 8 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், செம்மணி மனித புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 98 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மொத்தமாக 491 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 489 என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








